நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்... காங்கிரஸ் கட்சியின் 7 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

 
alcc alcc

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 7 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்   ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கியத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முறைப்படி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ்

தமிழகத்தில் தவெக கட்சியின் பலம் அதிகமாக உள்ள நிலையில், கூட்டணி ஒப்பந்தப்படி இந்த ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் விஜய் ஒதுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் பட்டியலில், கர்நாடக மாநிலத்தில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே, பவன் கெரா மற்றும் மன்சூர் அலிகான் ஆகிய 3  மூத்த தலைவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீனாட்சி நடராஜனும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நீரஜ் டான்கியும் நாடாளுமன்ற மேலவைக்கு போட்டியிடுகின்றனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள இடத்திற்கு பிரன்வ் ஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு மாநிலங்களின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தேசிய அரசியலில் கவனிப்பைப் பெற்றுள்ளது.