பரபரப்பு... காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு!

 
congress

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோசா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் கைது செய்துள்ளனர். பைந்தூர் பகுதியில் உள்ள ஒத்தினானே என்னுமிடத்தில் பஸ் மூலம் தப்பியோட முயன்ற குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்த முயன்றபோது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரைத் தாக்க முயன்ற முக்கியக் குற்றவாளியான ராஜு என்பவரின் காலில் சுடப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Karnataka Congress Leader Shot Dead By Bike-Borne Men In Udupi CCTV Captures Attack, Suspect Held

இந்தச் சோக சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பணத் தகராறு காரணமாகக் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் கொலை வழக்கில் உடுப்பி மாவட்டக் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை நெருங்கியுள்ளனர். இந்த அதிரடி என்கவுண்டர் நடவடிக்கையின் போது காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ்வி என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களைப் பிடிக்கச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.