டாக்டராக மாறிய யுவன்.. தூக்கம் வரலைனா அணுகலாம்.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ..!!!

 
யுவன் சங்கர் ராஜா

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன், முஸ்தபா முஸ்தபா, கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் நடிகர் சதிஷ் நடித்து வருகிறார்.இதில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் விருப்பமான இசையமைப்பாளர் யுவன்.
இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தை தயாரிக்குகிறார்கள்.

ஏஜிஎஸ் 24:வெளியானது கான்ஜூரிங் கண்ணப்பன் போஸ்டர்!- Dinamani

சமீபத்தில், "தூக்க வரவில்லையா?" இசை மருத்துவர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகுங்கள் என்ற ப்ரோமோ வைரலானது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்தான் பலருக்கும் மருந்தாக இருக்கிறதென இந்த விடியோ அமைந்துள்ளதால் யுவன் ரசிகர்களால் இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web