ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்திற்கு ஒப்புதல்.. தாய்லாந்தில் அதிரடியாக மசோதா நிறைவேற்றம்!

 
LGBTQ

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் திருமண சமத்துவ மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலின வேறுபாடின்றி திருமணம் செய்பவர்களுக்கு சம உரிமையை சட்டப்பூர்வமாக்குகிறது இந்த மசோதா. தற்போதுள்ள சட்டத்தில், திருமண பந்தம் தொடர்பான ஷரத்துகளில் உள்ள "ஆண்கள் மற்றும் பெண்கள்" மற்றும் "கணவன் மற்றும் மனைவி" என்ற வார்த்தைகள் "தனிநபர்கள்" மற்றும் "வாழ்க்கைத் துணைவர்கள்" என்று மாற்றப்பட்டுள்ளன.

LGBTQ

மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, இன்று வாக்கெடுப்பு நடைபெற்றபோது, மொத்தமுள்ள 413 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து பல உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.சட்டம் LGBTQ தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மற்றும் நிதி மற்றும் மருத்துவ உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இப்போது செனட் சபைக்கு அனுப்பப்படும். பொதுவாக கீழ்சபையால் நிறைவேற்றப்படும் திருத்தத்தை செனட் ஏற்றுக்கொள்வதால் இந்த மசோதா செனட்டில் போட்டியின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மன்னர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டம் அமலுக்கு வரும்.

LGBTQ

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், தென்கிழக்கு ஆசியாவில் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக தாய்லாந்து மாறும். தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web