சென்னை ரயிலை கவிழ்க்க சதி? ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி!

 
பொன்னேரி ரயில் நிலையம்

தண்டவாளத்தில் சிக்னல் சந்திப்பு பெட்டியின் இணைப்பு போல்டுகள் மர்மமான முறையில் அகற்றப்பட்டு கிடந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரயில் இணைப்பு கம்பிகள் அறுந்து சிதறி கிடந்தன.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்னல் சந்திப்பு பெட்டியின் போல்ட் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதன் காரணமாக அதிகாலை 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.  தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் பாதையில் ரயிலை கவிழ்க்க சதி நடக்கிறதா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!