முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த காவலர் உயிரிழப்பு - அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு!
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்புக்காவல் படை காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆவடி சிறப்புக்காவல் படை காவலர் நாயக் தர்மராஜ் என்பவருக்குத் திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி சிறப்புக்காவல் படை முகாமில் உயிரிழந்த காவலர் நாயக் தர்மராஜின் உடலுக்குக் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
