அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே தலைமை காவலர் பரிதாப பலி!!

 
ramnad ramnad

 

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே மணல் அள்ளிய டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றபோது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அரசு பேருந்து ஒன்று அந்த வாகனத்தின் மீது மிக பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தேவிபட்டினம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் மகேஷ் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

அரசு பேருந்து மோதிய வேகத்தில் அந்த வாகனத்தின் அடியில் சிக்கி அவர் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தின் கோர பிடியில் சிக்கிய அரசு பேருந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.

போலீஸ்

பேருந்து கவிழ்ந்த இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து தேவிபட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.