கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம்... நாளை கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் கிரஷர் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அரசு விதித்துள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்யக்கோரி கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். புதிதாக சிறு கனிம நில வரி விதித்துள்ளதுடன், கனிமம் வெட்டி எடுப்பதற்கான வரியும் அதிகரித்துள்ளது.
பழைய முறைப்படி கன மீட்டர் அளவில் அனுமதி வழங்கவும் கிரஷர் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறு கனிம நில வரியால் ஜல்லி, எம்.சாண்ட் விலை ஒரு யூனிட்டுக்கு தலா ரூ.1,000 வரை அதிகரிக்கும்.
தமிழகத்தில் 2000க்கும் மேற்பட்ட கிரஷர் குவாரிகள் உள்ள நிலையில் சிறு கனிம நிலவரியால் எம் சாண்ட்டின் விலை உயரும். சிறு கனிம நில வரியால் ஜல்லி, எம்.சாண்ட் மீதான வரி 180 மடங்கு வரை உயர்ந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!