ஆகஸ்ட் 3ம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு!!

 
ஆசிரியர்கள் கூட்டம் பெண்கள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற கூடிய ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு, இடம் மாறுதல் இவற்றிற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் செயல்பட்டு  வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது.  

ஆசிரியர்கள்

இது குறித்து  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், நடப்பாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமும்,  விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்களுக்காண கலந்தாய்வு நேரடி முறையிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள்


முதல் கட்டமாக முதுகலை ஆசிரியர் தலைமை ஆசிரியர்கள் கணினி, உடற்கல்வி உட்பட  பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.   பட்டதாரி இடைநிலை மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதியும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கலந்தாய்வில் எந்த தவறுகளும் நிகழாது. இதற்கு ஏற்றவாறு  ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!