இடைத்தேர்தலில் போட்டியா? சிருங்கேரி சாரதா பீடத்தில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்!
தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி கிழக்கில் நடிகை த்ரிஷா போட்டியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை த்ரிஷா கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டது கவனம் ஈர்த்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட த்ரிஷா தயாராகி வருவதாகவும், அதற்காகவே தனது வேண்டுதல்களை நிறைவேற்ற ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
சிருங்கேரி சாரதா பீடத்தில், கோயில் ராஜகோபுரம் முன்பு நின்றபடி நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
'DIVINE' என்ற தலைப்புடன் அவர் பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. ஆன்மிகப் பயணமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தரிசனம் குறித்த பதிவுகளுக்குப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நெல்லையில் த்ரிஷா பெயரில் பேரவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ள சூழலிலும் இந்தப் பயணம் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த ஆன்மிகப் பயணத்திற்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது
