தொடர் மழை... வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு!

 
சிறுமி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தொடர் பெய்து வரும் மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 1ம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.நேற்று முன்தினம் இரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் நிற்கிறது.

மழைநீர்

இந்நிலையில் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேலாய்க்குடி கிராமத்தில்  கூலி தொழிலாளியான பால்ராஜ் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இன்று காலை இடிந்து வெளிப்பகுதியில் விழுந்தது. அந்த நேரத்தில் பால்ராஜின் 5 வயது மகள்  கீர்த்திகா கழிப்பறை செல்வதற்காக வீட்டின் வெளியே நடந்து சென்ற நிலையில், சிறுமி கீர்த்திகாவின் மேல் சுவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆம்புலன்ஸ்

சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மேலாய்குடி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!