தொடர்மழை... வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

 
கவியழகன்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவ் அரும் நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள நிலையில் இன்று இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

இதன் காரணமாக கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் செம்பியன் மகாதேவி கிராமத்தில் முருகராசு என்பவரது வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முருகராசு அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களது அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்  ஓடி சென்று அவர்களை மீட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகராசுவின் மகன் கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். கவியழகன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!