தொடர் மழை... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,537 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 99.79 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 98.93 அடியானது. நீர்இருப்பு 63.46 டிஎம்சியாக உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!