உலகில் முதன்முதலாக ஆண்களுக்கான கருத்தடை ஊசி... ஆய்வில் வெற்றி!
ஆண்களுக்கான ஊசி வாயிலான கருத்தடைக்கான ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில், கருத்தடையை கோரும், பாலுறவில் ஆக்டிவாக உள்ள இளம் தம்பதிகளில் 303 ஜோடிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆண்களுக்கு உரிய மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் கருத்தடை ஊசி செலுத்தப்பட்டது.
7 ஆண்டு ஆய்வின் முடிவில் கருத்தடை ஊசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 97.3% எனவும், கர்ப்பத்தடையின் அடிப்படையில் 99.02% எனவும் வெற்றி உறுதி செய்யப்பட்டது. மேலும், அவை தீவிர பக்கவிளைவுகள் இல்லாமல் இருந்தன. ஐசிஎம்ஆர் ஆய்வில் இது உலகளவில் கருத்தடைக்கான முன்னெடுப்பில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அதிலும் உலகின் அதிக மக்கள்தொகையுள்ள தேசத்தில், மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியமுள்ள தேசத்தில், ஆண்களுக்கான கருத்தடை ஊசி கண்டறியப்பட்டிருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளும் இந்த கருத்தடை ஊசி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதும் அவை தோல்விகரமாகவும், பக்கவிளைவுகளுடன் அறியப்பட்ட நிலையில், ஐசிஎம்ஆர் உருவாக்கி இருக்கும் ஆணுக்கான கருத்தடை ஊசி முக்கிய சாதனையாக அமைந்துள்ளது. சர்வதேச மருத்துவ இதழ்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஐசிஎம்ஆர் மருத்துவ ஆய்வு முடிவுகள் வரவேற்பு பெற்று வருகின்றன.