பங்களிப்பே பெருமை தான்! பவானிக்கு ஆறுதல் அளித்த பிரதமர்!

 
பங்களிப்பே பெருமை தான்! பவானிக்கு ஆறுதல் அளித்த பிரதமர்!


ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்று தடம் பதித்தார். ஆனால், பெண்களுக்கான தனி நபர் சாப்ரே பிரிவின் இரண்டாம் சுற்றில், உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் 7-15 என்று போராடி பவானி தேவி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவினார்.

பங்களிப்பே பெருமை தான்! பவானிக்கு ஆறுதல் அளித்த பிரதமர்!


தோல்வி குறித்து , “மிகப் பெரிய நாள். இது உற்சாகத்துடனும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தது. நான் முதல் போட்டியில் 15/3 என்ற கணக்கில் நாடியா அசிசியை வென்று வாள் வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக இடம் பிடித்தேன். ஆனால், இரண்டாவது போட்டியில் 7/15 என்ற கணக்கில், உலகின் சிறந்த வீராங்கனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மேனான் ப்ரூநெட்டிடம் தோல்வியடைந்தேன்.

நான் என்னுடைய பங்கை சிறப்பாகச் செய்தேன். ஆனால், வெற்றி பெறமுடியவில்லை. நான் வருந்துகிறேன்” என தமது ட்விட்டர் பதிவி பவானி தேவி குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவை தான் கணக்கில் கொள்ளப்படும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களுடைய பங்களிப்பால் இந்தியா பெருமை அடைந்தது. நம்முடைய குடிமகன்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்” என பதில் அளித்துள்ளார்.

From around the web