5G டேட்டாவுக்கு கட்டுப்பாடு; ரீசார்ஜ் கட்டணங்கள் தாறுமாறாக உயரும் அபாயம்!
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த செல்போன் வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகக் கடந்த சில ஆண்டுகளாக அள்ளிக் கொடுத்து வந்த அன்லிமிடெட் இலவச 5G டேட்டா சேவைக்குத் ஒட்டுமொத்தமாக மூடுவிழா நடத்த திட்டமிட்டு வருகின்றன.

நாடு முழுவதும் 5G அலைக்கற்றை ஏலம் மற்றும் அதற்கான அதிநவீன கோபுர உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளைச் செய்துள்ளன. ஆனால், இவ்வளவு பெரிய முதலீடுகள் மற்றும் தினசரி தொழில்நுட்ப செலவீனங்களுக்குக் கைமாறாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறுவனங்களுக்குக் கிடைக்கும் சராசரி வருவாய் என்பது இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தத் தொடர் நிதி நெருக்கடி மற்றும் நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போது வழங்கி வரும் அன்லிமிடெட் இலவச 5G டேட்டா சேவைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் சந்தையில் முற்றிலும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயனாளர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் வகையில், இந்த புதிய திட்டங்களின் கட்டண விலையானது தற்போதைய விலையை விட பன்மடங்கு உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இனிமேல் 5G அதிவேக டேட்டாவைப் பயன்படுத்த வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் தனியாகக் கூடுதல் கட்டணம் செலுத்தி பிரத்யேக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.
