சர்வதேச அளவில் வெடித்த சர்ச்சை... ட்ரம்ப் உதவியாளர்களுக்கு ரூ.45 லட்சம் ரொக்கப் பரிசு!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெள்ளை மாளிகையிலிருந்து கசிந்த ரகசிய சொத்து விவரங்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, அதிபர் டிரம்பின் மூன்று பெண் உதவியாளர்களுக்குத் தலா ரூ.45 லட்சம் ரொக்கமாகப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூன்று பேருமே இந்தத் தொகையைப் பரிசாகப் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே இவர்கள் மூவரும் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி வீதம் பெருந்தொகையைச் சம்பளமாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக ரொக்கப் பரிசு வழங்கப்பட்டிருப்பது தற்போது ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாகி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
