ஸ்டெர்லைட் போராட்டத்தில் சர்ச்சையில் சிக்கிய காவலர் ராஜா காலமானார்!

 
ஸ்டெர்லைட் ராஜா

தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த ராஜா (46), உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜா

அந்தப் போராட்டத்தின் போது, அப்போதைய ஆயுதப்படை காவலரான ராஜா போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று துப்பாக்கியால் சுட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.