சர்ச்சை வீடியோ.. பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா !!

 
சேத்தன் சர்மா

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்திய கிரிக்கெட் அணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஸ்டிங் ஆப்பரேஷன் செய்தது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்டிங் ஆப்பரேஷனில் சிக்கியவர் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா. இந்திய அணி விவகாரம் குறித்து இவர் பேசிய வீடியோ வெளிவந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கொட்டியது.

சேத்தன் சர்மா

முன்னாள் இந்திய கேப்டனுமான இகங்குலிக்கும் விராட் கோலிக்கும் இடையேயான பணி மோதல்கள், இந்திய வீரர்கள் பலர் ஊக்க மருந்து எடுப்பது, பும்ராவின் உடற்தகுதி குறித்து பேசியது பேசுபொருளானது. இந்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சர்ச்சைக்கு இடையே டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடம் சென்றது.

சேத்தன் சர்மா

இந்த நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தையும் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா ஏற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரின் இந்த ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web