புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா மற்றும் செப்சிஸ் பாதிப்பு!

 
குழந்தை வாயில் டேப்

 

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், பிறந்த உடனே பெண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பொதுவாகப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இந்த அதிசய வழக்கில் கொரோனா தொற்றோடு சேர்ந்து குழந்தையின் உடலில் கடுமையான பாக்டீரியா தொற்றும் பரவி, 'செப்சிஸ்' எனப்படும் உயிருக்கே ஆபத்தான இரத்த நச்சுத்தன்மை நிலையை உருவாக்கியது.

கொரோனா

இதனால் குழந்தையின் இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண பாக்டீரியா தொற்றுக்கும், கொரோனாவால் ஏற்படும் மல்டிசிஸ்டம் இன்ப்ளமேட்டரி சிண்ட்ரோம் பாதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

கொரோனா

உடனடியாகச் செயல்பட்ட கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் குழந்தை நல தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் சாந்தனு ரே மற்றும் அவரது குழுவினர், மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மூலம் குழந்தையின் துல்லியமான நோய் பாதிப்பைக் கண்டறிந்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின் அக்குழந்தை வெற்றிகரமாக உயிர் பிழைத்து சாதனை படைத்துள்ளது.