எங்கு பார்த்தாலும் ஊழல், சினிமா மாதிரி தான் சட்டமன்றம் நடக்கிறது - எடப்பாடி பழனிசாமி!

 
எடப்பாடி

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற 110 நாட்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக அரசு பதவியேற்று குறுகிய நாட்களே ஆனாலும், நிர்வாகச் சீர்கேடு காரணமாக மாநிலத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசு ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடிவிஜய் எடப்பாடி

எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முன்பு ரூ. 10,000 லஞ்சம் கேட்டவர்கள் தற்போது ரூ. 20,000 கேட்பதாக மக்கள் மத்தியில் பேச்சு இருப்பதாகவும், முதலமைச்சரின் பெயரைச் சொன்னால் லஞ்சத் தொகை மேலும் அதிகரிப்பதாகவும் கடுமையாகச் சாடினார். சினிமாவில் வரும் காட்சிகளைப் போலவே தற்போதைய சட்டமன்ற நடவடிக்கைகள் உள்ளதாகவும், அமைச்சர்கள் தங்களுக்குரிய துறை சார்ந்த கேள்விகளுக்கு முறையான பதிலளிப்பதில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

தவெக அரசு தொடர்ந்து ஆட்சி நடத்தினால், தமிழ்நாட்டின் கடன் சுமை மேலும் அதிகரித்து ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.