காய்கறிக் கழிவுகளில் நாட்டு வெடிகுண்டு.. சாப்பிட முயன்ற கன்றுக்குட்டிக்கு நேர்ந்த சோகம்!

 
பவின்குமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவின்குமார். இவர் தனது வீட்டில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பவின்குமார் வழக்கம்போல் அதே பகுதியில் உள்ள வண்டல் மண் படுக்கையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.  இதையடுத்து, மேய்ச்சலுக்குப் பிறகு மாடுகளை வீட்டுக்குக் கொண்டு வர பாலாற்றிற்கு சென்றபோது, வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக காய்கறிக் கழிவுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு எதிர்பாராதவிதமாக வெடித்து கன்றுக்குட்டின் மீது தாக்கியது.

\

இதில் கன்றின் தாடை கிழிந்து ரத்தம் கசிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் உடைந்தார் பவின்குமார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசில் பவின்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன விலங்குகளை வேட்டையாட வெடிகுண்டு வைத்தவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் வன விலங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடி பொருட்களை சிலர் மறைத்து வைத்து கால்நடைகளை மேய்ச்சலில் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைப்பவர்கள் மீது வனத்துறையும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web