டிபன் பாக்ஸில் நாட்டு வெடிகுண்டு.. சரித்திர பதிவேடு குற்றவாளியை சுற்றி வளைத்து கைது..!!

 
ரவுடி கார்த்திக்

ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வெடிகுண்டு கார்த்திக் என்பவர் சென்னை வில்லிவாக்கத்தில் கைது. போலீஸார் விசாரணையில் 2 டிபன் பாக்ஸில்  வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்தனர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான கார்த்திக் என்பவர் . நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த போது  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டு கொண்டிருந்தனர். அப்போது கார்த்திக் அங்கு தகராறில் ஈடுபட்டார். பிறகு சாலையில் கத்தியுடன் ரகலையில் ஈடுபட்டு வருவதாக அருகில் உள்ள வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

பின்னர் புகாரின் அடிப்படையில்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வில்லிவாக்கம்  போலீசார்  விசாரணையின் போது கார்த்திக் வீட்டில் சென்று மறைந்து விட்டதாகவும் பிறகு போலீஸார் வீட்டில் உள்ளே சென்று விசாரிக்கும் பொழுது அங்கு இருக்கும் டிபன் பாக்ஸ் கையில் எடுத்து இந்த டிபன் பாக்ஸில் வெடிகுண்டு இருப்பதாக போலீசார்க்கு மிரட்டல்  விடுத்துள்ளார்.

பின்னர் வில்லிவாக்கம் போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் பின்னர் கார்த்திகை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கார்த்திக்கை வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற  வெடிகுண்டு கார்த்திக் என்பதும் இவர்மீது ராணிப்பேட்டை மாவட்டம் பகுதிகளில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் மேலும் இவர்க்கு முன்பகை விரோதிகள் இருப்பதாகவும் மேலும் வழிப்பறி கொலை முயற்சி போன்ற பலவகை குற்றங்கள் ஈடுபட்ட நிலையில் சிறைக்குச் சென்று வந்த உடனே தலைமாறாக வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. 

நாட்டுவெடிகுண்டு

மேலும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்து வரும் ஒரு சிலரை குறி வைக்கும் வகையில் தற்போது டிபன் பாக்ஸில் நாட்டு வெடி குண்டு வைத்திருந்தும்  சென்னை வில்லிவாக்கம் பகுதியில் யாருக்காக என்பதும் இந்த நாட்டு வெடி பொருள் புது விதமாக உள்ளதால் வெடிப்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளை நேரடியாக வரவழைத்து சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவும் மேலும் திடுக்கிடான தகவல்களாக வில்லிவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணைக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

From around the web