கராத்தே மாஸ்டரையே நாக் அவுட் செய்து தீர்த்துக் கட்டிய தம்பதி.. அதிரவைக்கும் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகநாதனை காணவில்லை என கடந்த 13ம் தேதி அவரது மகன் அஜய் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் லோகநாதனை தேடி வந்தனர்.
அடுத்து செல்போனில் கடைசியாக பேசிய நபர் யார் என்று விசாரணை நடத்தினர். அதில், நாவலூர் அடுத்த ஓஎம்ஆர் சாலை காரணை பகுதியை சேர்ந்த சுரேஷ்-கஸ்தூரி தம்பதி கடைசியாக அவரிடம் பேசியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செம்மஞ்சேரி பூங்காவில் கராத்தே மாஸ்டர் லோகநாதன் , யோகா போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்து வருகிறார். இதையடுத்து சுரேஷ்-கஸ்தூரியின் 11 வயது மூத்த மகள் லோகநாதனிடம் கராத்தே பயிற்சி பெற்றுள்ளார். அப்போது லோகநாதனிடம் கஸ்தூரியும் பயிறு பெற்று வந்துள்ளார். அப்போது கஸ்தூரியின் உடலில் பல இடங்களில் பாலியல் இச்சையோடு தொட்டதாக கூறஒப்படுகிறது.
இதுகுறித்து , அவர் தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். லோகநாதனின் செயலால் கஸ்தூரி கடந்த ஒரு மாதமாக யோகா பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. யோகா பயிற்சிக்கு செல்லாததால் கஸ்தூரியை செல்போனில் தொடர்பு கொண்ட லோகநாதன், யோகா பயிற்சிக்கு வருமாறு வற்புறுத்தினார். இதனால் மனமுடைந்த , கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, லோகநாதனை வெறிச்சோடிய பகுதிக்கு வரவழைத்து, அடித்துக் கொன்று, அங்கிருந்த கிணற்றில் வீசியுள்ளனர்.
உடனே போலீசார் இருவரையும் லோகநாதன் கொன்றதாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கிணற்றில் மிதந்த லோகநாதன் உடலை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கானத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!