ரயிலில் பெட்சீட் திருடிய தம்பதி: சோதனையில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ வைரல்!
ரயிலில் பயணம் செய்த தம்பதியிடம் டிக்கெட் பரிசோதகர் நடத்திய சோதனையில், அவர்களின் பையில் ரயில்வேக்குச் சொந்தமான இரண்டு பெட்சீட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரயில் நிலையத்தில் மற்ற பயணிகள் இறங்கிய பிறகும், கணவன்-மனைவி இருவரும் கடைசியாக இறங்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அந்த நபரின் பையைச் சோதனை செய்ய முடிவு செய்துள்ளார்.
பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான இரண்டு பெட்சீட்கள் இருந்துள்ளன. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியபோது, அந்தப் பெண் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், இரண்டு பெட்சீட்களையும் பரிசோதகர் பறிமுதல் செய்தார்.
குறைந்த மதிப்புள்ள பெட்சீட்களுக்காக இப்படி நடந்துகொள்வது சரியா எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
