உயர் அழுத்த மின்சார கம்பியை பிடித்து தம்பதியினர் தற்கொலை... பெரும் சோகம்!

 
புவனேஸ்வரி புவனேஸ்வரி

 தமிழகத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம்  செண்பகராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயது  மு.குமரேசன்.   இவரது மனைவி புவனேஸ்வரி . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 

மின்சாரம்
 
வீட்டின் தரைதளத்தில் தந்தை மாசிலாமணியும், முதல் தளத்தில் மகன் குமரேசனும் வசித்துள்ளனர். கரியாபட்டினம் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வந்த குமரேசன், கடன் சுமையால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்   வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற குமரேசன், மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியை பிடித்தார். மின்சாரம் பாய்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த புவனேஸ்வரி, கணவனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 

ஆம்புலன்ஸ்
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரியாப்பட்டினம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா