முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு - மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி!

 
வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில் மேலும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2011 - 2016 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்தார். பெருங்களத்தூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்குத் திட்ட அனுமதி வழங்குவதற்காக, தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இயங்கும் நிறுவனங்களின் கணக்குகள் மூலம் சுமார் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேல் விசாரணைக்கு அனுமதி: இந்த வழக்கின் கூடுதல் விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரித்து மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முழு அனுமதி அளித்துள்ளது.

மேல் விசாரணையை விரைந்து முடித்து, அதற்கான கூடுதல் அறிக்கையை 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய நபர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உள்ளனர்.