போக்சோ வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன்!

 
போக்சோ வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

போக்சோ வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன்!

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் மீது அங்கு படித்து வரும் மாணவிகளில் சிலர் பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் ஜோதிமுருகன் தலைமறைவானர்.

இதனையடுத்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஜோதிமுருகனை கைது செய்ய சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து ஜோதிமுருகனை தேடி வந்தனர். இந்நிலையில் ஜோதி முருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த வாரம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புருஷோத்தமர் உத்தரவிட்டார். 

போக்சோ வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன்!

இந்நிலையில் போக்சோ வழக்கில் பதியப்பட்ட ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜோதிமுருகன் நாள்தோறும் வட மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கியுள்ளது.

From around the web