கொளத்தூர் தோல்விக்கு எதிராக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு!

 
கொளத்தூர் பாபு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று காலை உயர் நீதிமன்றத்தில் வெளியாகிறது.

நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கொளத்தூர் பாபு

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

பொதுவாகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், காலதாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் உரிய விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கொளத்தூர் பாபு

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்குப் பிறப்பிக்க உள்ளது. இத்தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் தி.மு.க. தரப்பினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.