வார இறுதியில் சுற்றுலாப் பயணிகள் சோகம்... 2வது நாளாக குற்றால அருவியில் குளிக்கத் தடை!
Aug 1, 2026, 10:30 IST
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று குற்றாலத்திற்கு ஆர்வம்டன் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் நீர்வரத்து சீரானதும் பயணிகள் வழக்கம்போல குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
