உறவினர் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. அடுத்தடுத்து அட்டூழியம் செய்து வந்த மெக்கானிக் இளைஞர்!

 
உல்லாசம் சிசிடிவி பாலியல் திருமணம் காதல் கேமிரா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில், உறவினர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த மெக்கானிக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கோபி பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (49) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவினரின் 26 வயது மனைவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் கணவரைக் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

இந்நிலையில் சமீபத்தில் இளம்பெண்ணின் கணவர், மோகன்குமாருடன் இணைந்து புதிதாகத் தொழில் தொடங்கப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பயத்தை விடுத்து நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தன் கணவரிடம் விளக்கமாகக் கூறினார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவியையும் அழைத்துச் சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மோகன்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.