கோவாக்சின்.. கோவிஷீல்ட்… எந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்! ஆய்வில் தகவல்!

கோவாக்சின்.. கோவிஷீல்ட்… எந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்! ஆய்வில் தகவல்!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை உள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளன.

கோவாக்சின்.. கோவிஷீல்ட்… எந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்! ஆய்வில் தகவல்!

இது குறித்து வெளியான ஆய்வு முடிவுகளில், இரண்டு டோஸ்கள் தடுப்பூசியும் செலுத்திக் கொண்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். \

கோவாக்சின்.. கோவிஷீல்ட்… எந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்! ஆய்வில் தகவல்!

தடுப்பூசிகளின் பரவலை நாடு முழுவதும் பரவலாக்குவதன் மூலம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
இரு தடுப்பூசிகளின் செயல்பாடுகளையும் ஒப்பு நோக்குகையில், கோவேக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்திகள் காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து டாக்டர் ஏ.கே.சிங் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் டாக்டர் ஏ.கே.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்

From around the web