செம..... மாட்டு சாணத்தில் இருந்து காலண்டர், டைரி, பைகள்!!

 
பேப்பர் டைரி

ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள சுதர்சன்புரா பகுதியில் வசித்து வருபவர்  பீம் ராஜ்.  இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக அச்சகத்  தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு 2017ம் ஆண்டு மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்கலாம் என்ற திட்டம் உதித்தது. இதனை செயல்படுத்த தேவையான தகவல்களை திரட்ட தொடங்கினார்.  காகிதத்தின் தரம் குறைந்து விடும் என முதலில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பேப்பர்

 தனது மாட்டுசாணத்தில் இருந்து தான் தயாரித்த காகிதத்தை சந்தைப்படுத்தினார். இம்முறை அவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சாணத்தில் இருந்து  டைரிகள், காலண்டர்கள், பைகள் உட்பட  அன்றாட தேவைகளில் 100க்கும்  மேற்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தினார். அதே நேரத்தில்  பசுவின் சாணத்தில் இருந்து காகிதம் தயாரிப்பதற்கான காப்புரிமையையும் பெற்றார்.

மாடு

இவரது காகித தயாரிப்பு ஆலையில் 20 ஊழியர்கள் வரை பணி புரிந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை லாபம் பெறலாம் என்கிறார்.    பசுவின் சாணத்தை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி  காகிதம் தயாரிக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம், பசுவை தன்னிறைவாக ஆக்குவது மட்டுமே என்கிறார்.  இவரது பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பீம்ராஜ் பெருமை கொள்கிறார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web