பகீர் வீடியோ... ஓடும் ரயில் மீது மாட்டுச் சாணம் வீச்சு... இளைஞர்களின் அத்துமீறலால் பயணிகள் அதிர்ச்சி!

 
சாணம்

 

வட மாநிலம் ஒன்றில் தண்டவாளத்தின் அருகே நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள், அந்த வழியாக வேகமாகச் சென்ற ரயில் மீது மாட்டுச் சாணத்தை வீசியெறிந்துள்ளனர். திடீரென நடந்த இந்த சட்டவிரோதச் செயலால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் ரயில்களின் மீது இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் எந்தப் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நடைபெற்றது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.