அதிர்ச்சி வீடியோ!! குழந்தையை முட்டி தூக்கிய மாடுகள்!!

 
மாடு

சென்னை அரும்பாக்கம் அடுத்த எம்.எம்.டி.ஏ காலனி இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் சிறுமி, அவரது சகோதரருடன் நடந்து சென்ற போது பின்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பசு மாட்டினை பயம் காட்டுவது போல் குரல் கொடுத்துள்ளான். இதனால் மிரண்டுபோன பசு தனது அருகில் இருந்த சிறுமியை தனது கொம்பால் முட்டி தூக்கி கீழே தள்ளியது. காலால் வைத்து நசுக்கி தாக்கியது.


அதைப் பார்த்த சிறுமியின் தாயார் கத்தி கூச்சலிட்டார். அந்த சிறுமியும் அலறினார். ஆனால் அந்த பசு விடாமல் அந்தச் சிறுமியை முட்டி தாக்கியது. அந்த மாட்டுடன் இருக்கும் சற்றே வளர்ந்த கன்று ஒன்றும் சேர்ந்து தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து ஆளுக்கொரு கல்லாக எடுத்து வீசியும் அந்த மாடு அசராமல் சிறுமியை தாக்குகிறது.

ஒரு நொடிப் பொழுது மாட்டின் கவனம் சிதறவே இளைஞர் ஒருவர் சிறுமியை சற்று தூரம் இழுத்து வருகிறார். ஆனால் மீண்டும் மாடு சிறுமியை இழுத்து தாக்குகிறது. ஒரு நிமிடம் வரை இந்தப் போராட்டம் நீடிக்கிறது. அப்போது ஒரு தடியுடன் பின்னால் இருந்து ஓடிவரும் நபர் மாட்டை அடித்துத் துரத்துகிறார். பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்கின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் காண்போரை பதற வைக்கிறது. பசுமாடு இப்படி வெறியோடு தாக்குமா? என்று அஞ்ச வைக்கிறது.

மாடு
இந்த தாக்குதலில் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் ஐஏஎஸ், பசு மாட்டினை அஜாக்கிரதையாக சாலையில் உலாவ விட்ட அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web