மார்க்​சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்​துவ​மனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
மார்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த கே.பாலகிருஷ்ணனுக்கு கடந்த 2 நாட்களாக தொண்டை வலி, நெஞ்சு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு காது, மூக்கு, தொண்டை நல மருத்துவர்கள், பொது நல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web