"அமைச்சரவையில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை"- CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விளக்கம்!

 
சிபிஎம் மு.வீரபாண்டியன்

தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவது குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்து வந்த நிலையில், "அமைச்சரவையில் தற்போதைக்கு இடம்பெறும் எண்ணம் இல்லை" என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்துத் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சிபிஐ ஆதரவளித்தது என்பது, மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் ஒரு ஜனநாயகச் செயலேயாகும். அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து எங்களது கட்சித் தலைமை இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை."

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,  தங்களுக்குரிய காலம் கனிந்து வரும்போது மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்துச் சிந்திப்போம் என்பதே கட்சியின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும்.

தற்போதைய சூழலில் மக்கள் நலப் பணிகளுக்கும், கொள்கை ரீதியான ஆதரவிற்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்பது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், சிபிஐ மாநிலச் செயலாளரின் இந்தத் திட்டவட்டமான அறிக்கை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.