சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிமோனியாவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

 
சீதாராம் யெச்சூரி
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) நேற்று அனுமதிக்கப்பட்டார்.

சீதராம் யெச்சூரி

நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் யெச்சூரி அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவரது நோய்க்கான சரியான தன்மையை மருத்துவமனை வெளியிடவில்லை. CPI(M)ன் நெருங்கிய வட்டாரம், அவர் பரிசோதனைக்காகச் சென்றதாகவும், நிமோனியா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

எய்ம்ஸ்

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!