முதல்வரின் எச்சரிக்கையை மீறி லஞ்ச வேட்டை... நெல் மூட்டைக்கு ரூ.50, வாட்ச்மேனுக்கு ரூ.500 லஞ்சம் - கதறும் விவசாயிகள்!
Aug 26, 2026, 10:20 IST
தமிழக அரசின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.50 லஞ்சமாகக் கேட்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுக்காவிட்டால் நெல்லை எடைபோட அதிகாரிகள் மறுப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொள்முதல் நிலைய அதிகாரிகளுடன் சேர்த்து, அங்கிருக்கும் காவலாளிக்கும் (வாட்ச்மேன்) ரூ.500 வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை நிலவுவதாகப் பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
