கிரெடிட் மோசடிகளில் இழந்த பணத்தை 5 நாள்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வரவாக வழங்க வேண்டும் .... ரிசர்வ் வங்கி உத்தரவு!

 
கிரெடிட் கார்டு

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு வரம்பை முழுமையாக நிர்ணயிப்பதற்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளைப் பாரத ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ளது. அதில் மின்னணு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வங்கிகளும் தங்களது இணையச் சேவை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை வடிவமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை வங்கிகளே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு

இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்களின் கவனக்குறைவு இல்லாமல் ஏதேனும் கடன் அட்டை அல்லது இணைய மோசடிகள் அரங்கேறினால் அதற்கு வங்கியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற மோசடி சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு உடனடியாகத்  தெரிவிக்க வேண்டும். அவ்வாறு   தெரிவிக்கப்பட்ட 5 வேலை நாள்களுக்குள், மோசடி செய்யப்படதாகக் கூறப்படும் அசல் தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் தற்காலிக வரவாக வங்கிகள் உடனடியாகச் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு

பொதுமக்களின் கடின உழைப்புப் பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய பொருளாதார வழிகாட்டுதல்கள், ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் இணையப் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்படும் இழப்புகளை முழுமையாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக் கூடாது என்பதில் மத்திய வங்கி உறுதியாக உள்ளது. நிதித்துறையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள இந்த ரிசர்வ் வங்கியின் புதிய   உத்தரவு விபரங்கள்  ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முக்கியச் செய்தியாகப் பகிரப்பட்டு வருகிறது.