கிரிக்கெட் விளையாடியபோது பந்து தாக்கி 11 வயது சிறுவன் பலி... பெரும் சோகம்!

 
cricket

 

காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சாய் மோதிஷ் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த கிரிக்கெட் பந்து ஒன்று பலமாக அவரது தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய வேகத்தில் சிறுவன் சாய் மோதிஷ் திடீரென மயங்கிச் சரிந்து கீழே விழுந்துள்ளான். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிறுவன் சாய் மோதிஷ் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தான். விளையாடும் வயதில் கிரிக்கெட் பந்து தாக்கிச் சிறுவன் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்துயரச் செய்தி அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சிறுவனின் திடீர் மறைவால் அவனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.