வீடியோ!! முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய வீரர் !!

 
அலெக்ஸ் ஸ்டீல்

விருப்பமும் , உத்வேகமும் இருந்துவிட்டால் எதுவும் சாதிக்கலாம் என்பதற்கு பலப்பல உதாரணங்கள் அந்த வகையில் கிரிக்கெட் மீது தீரா காதல் கொண்ட 83 வயதான ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் முதுகில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு விளையாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  1967ல் இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணியில் அறிமுகமானவர் அலெக்ஸ் ஸ்டீல்.  

 

இவருக்கு தற்போதைய வயது 83. வயசானாலும் இவருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் சற்றும் குறையவே இல்லை. இன்னும் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.   ஃபோர்ஃபர்ஷைர் கிரிக்கெட் கிளப் அணிக்காக இன்னும் விளையாடி வருகிறார். அதில் 2020 முதல் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் சுவாச நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

வீடியோ!! முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய வீரர் !!

என்ன நடந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதை விடமாட்டேன் என தொடர்ந்து பிடிவாதமாக விளையாடி வருகிறார். இந்நிலையில், அலெக்ஸ் ஸ்டீல் சமீபத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விக்கெட் கீப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறித்தனமான  கிரிக்கெட் ரசிகர்கள் இதனை  ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web