தவெக கூட்டணி ஆட்சியில் நெருக்கடி - வைகோ, இடதுசாரிகள், காங்கிரஸ் அதிருப்தியால் பரபரப்பு!

 
செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசிய பேச்சும், அமைச்சர்களின் கருத்துகளும் தவெக ஆதரவு கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

மதிமுகவை போலவே அதிமுகவும் விரைவில் மாறும் சூழல் உருவாகும் என்றும், அடிமட்டத் தொண்டர்கள் யாரும் இல்லாமல் வெறும் தலைவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்படும் என்றும் கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் செங்கோட்டையன் சாடியுள்ளார்.

விஜய் மகிழ்ச்சி

தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்த இடதுசாரி இயக்கங்கள், அமைச்சர்களின் தன்னிச்சையான போக்கினாலும் சீண்டல்களினாலும் தீவிர அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, தவெக தலைவர் விஜய்யை 'அடுத்த பிரதமர்' என்று அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவது, தேசிய அளவில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இந்த உட்கட்சிப் பூசல்களும் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியும் தற்போதைய ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகவும் பெரும் அரசியல் நெருக்கடியாகவும் மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.