பெண் அமைச்சருக்கு முத்தமிடும் குரேஷிய அமைச்சர்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
Nov 5, 2023, 13:37 IST

குரோஷியாவின் அமைச்சர் குரூப் படத்திற்கு போஸ் கொடுக்கும் போது ஜெர்மன் பெண் அமைச்சரை முத்தமிட முயற்சித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குரோஷியாவின் வெளியுறவு அமைச்சர் கோர்டன் கிர்லிக்-ராட்மேன், ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் முத்தமிட முயற்சித்தார்.
So the head of the Croatian Foreign Ministry, attempted to kiss his German colleague Annalena Bärbock during a group photo......
— Richard (@ricwe123) November 4, 2023
🥴🥴🥴🥴 pic.twitter.com/mpaxdwMfBE
இந்த செயல் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கிர்லிக்-ராட்மேன் பேர்பாக் உடன் கைகுலுக்கி, பின்னர் முத்தமிட முன்னோக்கி சாய்ந்தார்.
"என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியவில்லை... நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் அன்புடன் பேசிக்கொள்வோம்," என்று அவர் விமர்சனத்திற்குப் பிறகு கூறினார்.
From around the
web