ஆற்றில் குளித்த இளம் பெண் மீது ஏறிய முதலை ... அதிர்ச்சி வீடியோ !

 
முதலை

 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவிடப்பட்டு கொண்டே இருக்கின்றன.அந்த வகையில் சமீபத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது திடீரென ராட்சத முதலை ஒன்று ஏறிய அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. நீருக்குள் மறைந்திருந்த முதலை எதிர்பாராத நேரத்தில் அவரை நெருங்கியுள்ளது. பதறிய அந்தப் பெண் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிருடன் கரையேறினார். இந்தச் சம்பவம் நெட்டிசன்களிடையே  பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆற்றுத் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் மறைந்திருந்த முதலை திடீரென அவரை நோக்கி வந்தது. அடுத்த சில நொடிகளில் அவரது உடல் மீது முதலை ஏறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அங்கிருந்து விலக முயன்றார். உயிருக்கு ஆபத்தான இந்தச் சூழலை எதிர்கொண்ட விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முதலை கடிக்க முயற்சிப்பதற்குள் பெண் சுதாரித்துக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியேறினார். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவர் தப்பிய காட்சி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.