பவானி ஆற்றில் பாறை மீது படுத்திருந்த முதலை! குளிக்கச் சென்ற மக்கள் அதிர்ச்சி

 
வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்று பள்ளி மாணவன் பலி !

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் முதலை ஒன்று காணப்பட்டதால், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள், பாறையின் மீது முதலை படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதலை

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை?

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே குத்தாரிபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் முதலை ஒன்று காணப்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு முதலை அங்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாறையின் மீது படுத்திருந்த முதலையை ஆற்றில் குளிக்கச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

முதலை

முதலையைப் பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை

ஆற்றில் முதலை காணப்பட்டதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. அந்த முதலையைப் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை முதலை காணப்பட்ட பகுதியில் ஆற்றில் இறங்குவதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.