முதலை வயிற்றில் மனித பாகங்கள்... காணாமல் போன தொழிலதிபர் விவகாரத்தில் அதிரடி திருப்பம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா மாகாணத்தில் உள்ள கோமதி ஆற்றில் காணாமல் போன தொழிலதிபரைத் தேடும் பணியில் அதிர்ச்சியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஆற்றுப்பாலத்தின் அடியில் அவரது கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒரு முதலையைச் சுட்டுக்கொன்று அதன் வயிற்றை ஆய்வு செய்தபோது, உள்ளே மனித உடல் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Heartbreaking: This is how the body of the big crocodile was carried out from the river with the remains of the body parts of the missing Mpumalanga businessman. His remains are inside the crocodile's huge belly. 💔
— The King of Trolls (@StHonorable) May 3, 2026
It's one of the painful death one can experience on earth. pic.twitter.com/bd2EkaCdLK
தொழிலதிபர் முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் எனப் போலீசாரும் வனத்துறையினரும் சந்தேகித்த நிலையில், இந்த ஆதாரங்கள் சிக்கியுள்ளன. முதலையின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் அந்தத் தொழிலதிபருடையது தானா என்பதை உறுதி செய்ய தற்போது டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியான பின்னரே, உயிரிழந்தவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என மாகாணப் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷனில் துரிதமாகச் செயல்பட்ட மீட்புக் குழுவினரை மாகாண போலீஸ் கமிஷனர் பாராட்டியுள்ளதோடு, பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். வனவிலங்குகள் அதிகம் உள்ள ஆற்றுப் பகுதிகளில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக மழைக்காலங்களில் பாலங்களைக் கடக்கும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஎன்ஏ முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்
