கடும் வெயிலால் கருகும் பயிர்கள்.. விவசாயிகள் வேதனை!

 
கருகும் பயிர்கள் விவசாயிகள் கருகும் பயிர்கள் விவசாயிகள்

தமிழகத்தில் நிலவி வரும் கடும் கோடை வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைந்து வருகின்றன. இதனால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது விவசாயிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வேதனையில் விவசாயிகள்! மழையில் முளைத்து வீணாகும் நெல்மணிகள் !

வெப்பம் அதிகரிப்பதன் விளைவாக, நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, கோடை காலங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி மற்றும் சிவப்பு சிலந்தி போன்றவற்றின் பெருக்கம் அதிகமாக இருக்கும். இவை பயிர்களின் சத்தை உறிஞ்சி வளர்ச்சியைப் பாதிப்பதோடு, விளைச்சலையும் பெருமளவு குறைத்துவிடுகின்றன.

50 ஆண்டுகளுக்கு பின் மீட்டெடுக்கப்பட்ட குளம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் வாட்ட, மறுபுறம் இந்தத் திடீர் பூச்சித் தாக்குதல்களால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். முறையான நீர் மேலாண்மை மற்றும் தகுந்த பூச்சி கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டால் மட்டுமே எஞ்சியிருக்கும் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.