சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.. பனிச்சுமையா? போலீசார் விசாரணை!

 
இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 96-வது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த உயிரிழந்தவர் சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் அஜீத் சிங் தற்கொலை செய்துக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ராணுவ வாகனம்

தெற்கு காஷ்மீர் மாவட்டமான அனந்த்நாக், பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள எஸ்.ஐ.சி.ஓ.பி. பகுதியில் அவர் வாகன ஓட்டுநராகப் பணியமர்த்தப்பட்டிருந்தார்.  நேற்று காலை பணியில் இருந்தபோது, திடீரெனத் தனது சேவைத் துப்பாக்கியால் அஜீத் சிங் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த சக வீரர்கள், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

அஜீத் சிங் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பணி அழுத்தம் காரணமா அல்லது குடும்பச் சூழ்நிலை ஏதேனும் காரணமா என்பது குறித்து சி.ஆர்.பி.எப். உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பனிப்பிரதேசமான காஷ்மீரில் நீண்டகாலமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களிடையே நிலவும் மன அழுத்தம் பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சக வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.