26 வயசுல கொடூரம்.. இளம்பெண்ணை 30 துண்டுகளாக கூறுபோட்டு ஃபிரிட்ஜில் வைத்திருந்த கொடூரம்... கதறிய தாய், தங்கை!

 
மகாலட்சுமி

சென்னையில் இளம்பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டுகளாக்கப்பட்டு சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக பெங்களூருவில் மகாலட்சுமி எனும் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டு 30 துண்டுகளாக கூறுபோடப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் கொலைச் செய்யப்பட்டு, அவரது வீட்டின் ஃப்ரிட்ஜுக்குள் 30 துண்டுகளாக கூறப்போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. பெங்களூரு வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் கடந்த 4 அல்லது 5 நாட்களுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்றும், கொலையாளி இளம்பெண்ணுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில், தாயும், சகோதரியும் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரிட்ஜுக்குள் தங்கள் மகளின் உடல் பாகங்கள் கூறப்போடப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு கதறி அழுதனர். 

மகாலட்சுமி

கடந்த சில வருடங்களாக பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் வசித்து வந்த மகாலட்சுமி , சமீபத்தில் வயாலிக்காவல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டில் மகாலட்சுமி தனியாகவே வசித்து வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். திருமணமான நிலையில், மகாலட்சுமியின் கணவர் பெங்களூருவுக்கு வெளியே தங்கியிருந்து வேலைப் பார்த்து வருகிறார். இந்த கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்து உடனடியாக அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தார். 

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறியதையடுத்து மகாலட்சுமியின் தாயும் சகோதரியும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும்  குளிர்சாதனப்பெட்டி அருகே இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பிரிட்ஜைத் திறந்து பார்த்து அதிர்ந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மகாலட்சுமியைக் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web